நீயென்பதே இன்பம் !!!

சுவாரஸ்யமாய் போடும்
சண்டைகள் யாவையுமே
காதல் மொழியில் முடிவதில்லை …
முடியுமென்ற எதிர்பார்பே இன்பம் !!!

ஆசையாசையாய் கொடுக்கும்
அனைத்து பரிசுகளுமே
ஆச்சர்யம் கொடுத்ததில்லை …
கொடுக்குமென்ற ஆசையே இன்பம் !!!

சிறந்ததாய் நினைக்கும்
சிந்தனைகள் யாவையுமே
சில சமயங்களில் ஒத்துப்போனதில்லை …
சிந்தனை நீயென்பதே இன்பம் !!!

அழகாய் ஜாடைக்காட்டும்
உன் விழியும் புருவமும்
உன்னை முழுதாய் புரியவைத்ததில்லை – என்றேனும்
புரியுமென்ற நம்பிக்கையே இன்பம் !!!

Advertisements

இதுபோதும் எப்போதும் …

உன்கை பிடித்து நடக்கும் நேரம்
உலகம் நம் பின்னால் வரும்
உன் தோள் சாய்ந்து உறங்கும் காலம்
சொர்கம் தேவையில்லை இனி இது போதும்

நீ என்னுடன் இருக்கும் நேரம்
இமயம் என் தோள் தாங்கும்
உன் சந்தோஷம் தரும் சுகம்
நானேஎனக்கு தேவையில்லை இனி இது போதும்

Half of it was written by me and other half by my better half 🙂

என்னுடன் இருந்தால் என்ன ?

ஐந்து நிமிடம் இழந்தாலே
ஆர்பாட்டம் பண்ணும் என்னிடம்
இருபத்து நான்கு மணிநேரத்தையும்
இரவல் கேட்காமல்
என்னுடன் இருந்தால் என்ன ?

பத்தரை மணியானாலே
போர்த்திக் கொண்டு படுத்துவிடும் என்னிடம்
மூனரை மணிவரை
மூளைக்குள் சண்டைபோடாமல்
என்னுடன் இருந்தால் என்ன ?

செல்போனைக் கண்டாலே
சீச்சீ போடும் என்னிடம்
செல்போனுக்குள்ளேயே
குடும்பம் நடத்தாமல்
என்னுடன் இருந்தால் என்ன ?

கவிதை எழுத சற்றே
கஷ்டப்படும் என்னிடம்
கவிதை காட்டையே
குடுத்துவிட்டாய் … சரி
என்னுடன் நீ இருந்தாலே போதும்
எப்படி இருந்தால் என்ன ?

அவளும்… நானும்…

moon-and-sea_1280x960_24854

பொர்ணமி மட்டுமே – என்னை
மயங்கச் செய்யுமென்று நினைத்திருந்தேன் …

கடல் அலை மட்டுமே – என்னிடம்
செல்லம் கொஞ்சுமென்று ரசித்திருந்தேன் …

தமிழ் மட்டுமே – என்னை
சரியாகபுரிந்து கொள்ளுமென்று எழுதிவந்தேன் …

மூன்றும் கலந்த தேவதையாய் நீ
வெறும் அதிர்ஷ்டசாலியாய் நான் …

 

அவளின்றி கழியும் நேரம் …

பேசும் நேரத்தைவிட ..
என்ன பேசவென்று
யோசிக்கும் நேரமே கஷ்டம் …

பார்க்கும் நேரத்தைவிட ..
எதார்த்தமாய் பார்த்ததாய்
நடிக்கும் நேரமே கஷ்டம் …

வாழும் நேரத்தைவிட ..
வீணாய் இப்படி
கவிதையெழுதும் நேரமே கஷ்டம் …

இருபத்தியெட்டு வருட வாழ்கையைவிட
நீயின்றி கழியும்
பொர்ணமி நிலவின் மாடிக் காற்று
மிகவும் கஷ்டம் … !!!

 

Wrote lyrics for a song – Situation given in the picture above

காதல் கடலில் – நாம்
அலையும் நுரையும் போல் …
மாலை வெயிலில் – வந்து
கூவும் குயிலைப் போல் …

குயிலே.. பாடி.. போகாதே
விழிகள்..  காத்துக்.. கிடக்காதே …
குயிலும் நீயென்றால்
குரலும் நானல்லவா …

சகியே …
காதல் கடலில் – நாம்
அலையும் நுரையும் போல் …
மாலை வெயிலில் – வந்து
கூவும் குயிலைப் போல் …

(சரணம் – 1)
நிலவினைத் தொடும் மீன்கள் இங்கில்லை
விண்மீனாய் வாழ்கிறேன் …
கடலினைத் தொடும் வானம் இங்கில்லை
தொடுவானம் ஆகிறேன் …

விழிகள் பார்ப்பதாய்
விரல்கள் கோர்ப்பதாய்
எப்போதும் கனவு காண்கிறேன் …

கருவிழி பார்வைக்காய்
காதலின் வேளைக்காய்
எட்டுத்திக்கும் ஏங்கிப் பார்த்தேன் …

(சரணம் – 2)
மடியினில் விழும் நேரம் என்றில்லை
என்றென்றும் ரசிக்கிறேன் …
இரவினில் வரும் கனவு என்றில்லை
என்நேரமும் நினைக்கிறேன் …

காற்றினுள் சுவாசமாய்
மனதினுள் நேசமாய்
உன்னோடு சேர்ந்து வாழ்வேன் …

கடல்களும் துகள்களாய்
வருடங்கள் நொடிகளாய்
கட்டிப்போட்டுக் காதல் செய்வேன் …

(பல்லவி)
காதல் கடலில் … …